தென்மராட்சி் – சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் டிப்பர் ரக வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த முதயவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

