எதிர்வரும் திங்கள் முதல் 7 நாட்களுக்கு சுயமான பயணக் கட்டுப்பாட்டின் மூலம் கொரோனா நெருக்கடியை குறைக்க ஒத்துழைக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் (பிஎச்ஐ) சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உடனடி முடக்க நிலை சாத்தியமற்றது என்பதால் சுயமான பயணக் கட்டுப்பாட்டை பொது மக்கள் தமக்கு தாமே ஏற்படுத்திக் கொண்டால் நெருக்கடியை குறைக்கலாம் என்ற நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

