மன்னார் ஸ்ரீ முருகன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பொங்கல் விழாவும் அதனோடு இணைந்து நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னார் ஸ்ரீ முருகன் அறநெறிப் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயளாலர் ம.பிரதீப்,ஸ்ரீ முருகன் ஆலயப் பரிபாலன சபையினர், அறநெறி பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயம் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்குமான பரிசில்களினை தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

