27.8 C
Colombo
Friday, August 21, 2026

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் கசிவு -மற்றுமொருவர் கைது!

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் ii பாக வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் மற்றுமோர் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய சந்தேக நபர் மொரட்டுவ மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை நிலையத்தில் உதவியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்தவர் ஆவார்.

2023 உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்களை தனது வீட்டில் வைத்து அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 8 ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 10 ஆம் திகதியும் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles