28.9 C
Colombo
Friday, August 21, 2026

இன்று கூடும் கொவிட் செயலணி – பயணத்தடைக்கு அப்பால் தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்கிறார் பிரதமர்.

தற்போதைய சூழ்நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் பயணத்தடையை அமுல்படுத்துவதா அல்லது வேறு என்ன நடவடிக்கையை அமுல்செய்வது பற்றி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் கோவிட் ஒழிப்பு பற்றிய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் அமைச்சர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ சுகாதார நிபுணர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles