யாழ் தென்மராட்சி மண்ணில் இருந்து மன்னார் மாவட்ட அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்ற க.கனகேஸ்வரனை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(07) கொடிகாமம் ஏ9 வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் அ.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
தென்மராட்சி மக்களும் பொது அமைப்புக்களும் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் அவரது தாயார் க.கனகம்மா மற்றும் மதகுருமார்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்கள் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் விரிவுரையாளர்கள் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமயப் பெரியோர்கள் தென்மராட்சி ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்துப் பாமாலை வழங்கி விழா நாயகன் கௌரவிக்கப்பட்டதோடு அவரது பாரியாரும் தாயாரும் கௌரவிக்கப்பட்டனர்.

