25 C
Colombo
Saturday, October 10, 2026

கொக்குவில் மற்றும் யாழ் நகரில் போதைப்பொருளுடன் 15 பேர் கைது

காணொளியாக பார்க்க…..

https://fb.watch/p2B3_H88hu/?mibextid=RtaFA8

கொக்குவில் நந்தாவில் பகுதியிலும் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு நாட்களில் 15 பேர் கஞ்சா, ஹெரோயின்,போதை மாத்திரை என்பவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்ட 15 பேரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த 15 பேரில் ஆறு பேர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles