யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஈருருளி கழகம் ரைட் மீ( Ride me) எனும் தொலைபேசி செயலியினை இன்றைய தினம் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இதனூடாக காலையில் மாணவனை வாகனங்களில் பாடசாலைக்கு இறக்கும் பெற்றோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் மதியம் வரமுடியாது விடின் தமது மகனுக்கான துவிச்சக்கரவண்டியினை பதிவு செய்வதனூடாக பாடசாலை முடிவடைந்ததும் துவிச்சக்கர வண்டியில் மாணவன் வீடு செல்வதற்கான வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
துவிச்சக்கர வண்டி பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கவும் மாணவர் உடல் ஆரோக்கியத்தினை பேணவும் இது உதவும் என கருதப்படுகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் இன்று(20) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

