23.9 C
Colombo
Monday, October 12, 2026

குருநகர் பிரதேசத்தில்  இலவச மருத்துவ முகாம்

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில்  இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது.

சர்வதேச கடற்தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை கடற்றொழில் அமைச்சின் நடமாடும் சேவையும் குருநகர் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles