27.8 C
Colombo
Friday, August 21, 2026

சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் பவள விழா!

யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பவள விழா புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் கலையரங்கில் வெகு விமர்சையாக நிலையத்தின் தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் நடைபெற்றது.

முதன்மை நிகழ்வாக காலை புதிதாக அமைக்கப்பெற்ற கலைமகள் கலையரங்கு சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமாரியினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

தொடர்சியாக அரங்கை  சம்பிரதாய பூர்வமாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் செயலாளர் பாலரூபன் திறந்து வைத்தார். இதன்பொழுது வலி மேற்கு சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நோபேட் யூலியன் ,சுழிபுரம் மத்தி மற்றும் மேற்கு கிராம அலுவலர்களான ஜீவராசா மற்றும் பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக மாலை பவள விழா கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்பொழுது கலைமகள் சனசமூக நிலையத்தில் 1948 ஆம் ஆண்டு முதல் நிலையத்திற்காக சேவையாற்றி மறைந்த நிர்வாக உறுப்பினர்களின் திருவருவ படங்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ச்சியாக வடலியடைப்பு கலைவானி கலைமன்றத்தின் வரவேற்பு இன்னியத்துடன் கலைமகள் அரங்கு நோக்கி அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ச்சியாக பவள விழா சிறப்பு மலர் யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரனால் வெளியீடு செய்துவைக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்வுகள் இடமெபெற்று  இறுதி நிகழ்வாக இசைக்குழுவின் இன்னிசை கானமும் இடம்பெற்றது.

இதன்பொழுது சிறப்பு விருந்தனராக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ,கலைமகள் சனசமூக நிலையத்தினர்,சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles