இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பஸ் சாரதி, நடத்துனர் ஆகியோருக்கு இடையில், இன்று (9) காலை கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
கரடிப்போக்கு சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது, இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பஸ் சாரதி, நடத்துனர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

