முன்னர் திட்டமிட்டிருந்தபடி செப்டம்பர் மாதத்தின் முதல் வார ஆரம்பத்தில் பாடசாலைகளை மீளத் திறப்பது சாத்தியமற்றது என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (9) சற்றுமுன்னர் அறிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுட்டார்.

