மட்டக்களப்பு ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் பச்சிளம் குழந்தையொன்று விசப்பாம்பு தீண்டியதில் பரிதாபகரமான முறையில் நேற்றையதினம் பலியானது.
இக்னேஷ் அபிலாஷ் என்னும் ஆறு மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது.
தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நேற்று அதிகாலை பாம்பு தீண்டியது. மயக்க நிலையில் இருந்த குழந்தையை காலை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்தபோது அங்கு குழந்தை இறந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனைகளில் தெரிவிக்கப்பட்டது.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

