28.9 C
Colombo
Friday, August 21, 2026

கொடிகாமத்தில் மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு – கட்சிகளிடையேயான போட்டி காரணமா?

கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

காணொளியாக பார்க்க 

https://fb.watch/ouFAObrd-U/?mibextid=Nif5oz

முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles