29.5 C
Colombo
Friday, August 21, 2026

யாழ். பல்கலையில் மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்

மின்னிணைப்பு தகைமைச் சான்றிதழ் கற்கை நெறியினை களனி கேபிள் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடம் தமிழ் மொழியில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

மின்னிணைப்பு தொடர்பான தத்துவ விளக்கங்களை வழங்குவதே இக்கற்கை நெறியின் பிரதான நோக்கமாகும். எனவே மின்னியல் தொழில்நுட்ப துறையில் முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

காலம் – ஒரு வருடம் (பகுதி நேரம் மாதத்தின் முதலாவது சனி மற்றும் ஞாயிறு )

தெரிவு – நேர்முக பரீட்சை மூலம்

இடம் – பொறியியல் பீடம், அறிவியல் நகர், கிளிநொச்சி

மேற்படி கற்கை நெறியை பயில்வதற்கு பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை 16.10.2023ம் திகதிக்கு முன்னதாக கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபாலில் அல்லது நேரில் ஒப்படைக்க முடியும் .

மேலும், பொருத்தமான விண்ணப்பதாரிகள் மின்னிணைப்பு தொழிலில் தொழில் செய்த சேவைக்காலம், சேவை விபரம் என்பவற்றை தெளிவாக குறிப்பிட்டு தமது சுய விபரக்கோவையை கீழுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :-

ஒருங்கிணைப்பாளர்,

“மின்னிணைப்பு தகைச்சான்றிதழ் ”

மின் மற்றும் மின்னனு ,

பொறியியல் பீடம் ,

அறிவியல் நகர்,

கிளிநொச்சி.

கடித உறையின் மேல் மூலையில் “மின்னிணைப்பு தகைமைச்சான்றிதழ் கற்கை நெறி “என தெளிவாக குறிப்பிடவேண்டும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles