ஐக்கிய மக்கள் சக்தியினால் இருபத்தி மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணமொன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணம் யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்த மருத்துவ உபகரணம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் யாழ் போதனா வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

