யாழ்ப்பாண மாவட்டத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை(25) மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வறட்சி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் வரட்சியில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக நீர்நிலைகளை தூர்வாருதல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மாகாண விவசாயப் பணிப்பாளர்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வைத்திய அதிகாரி, நீர்ப்பாசன பொறியியலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகபிரதிநிதி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலர் மற்றும் இலங்கை இராணுவத்தின் பிரதிநிதி, கடற்படைப் பிரதிநிதி ஆகியோரும் உலக உணவுத்திட்ட அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

