29.5 C
Colombo
Friday, August 21, 2026

சண்டிலிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல்; ஒருவர் காயம் உடைமைகள் நாசம்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு பதிவானதாக பொலிசார் தெரிவித்தனர்.

முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, ,சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொருக்கி சேதம் விளைவித்ததுடன் இருமோட்டார் சைக்கிள்களை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனயைடுத்து இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles