29.5 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தினால் நீதம் இதழ் வெளியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் முன்னெடுக்கும் நீதம் இதழ் வெளியீட்டு விழா இன்றையதினம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை 10 மணியளவில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜீன ஒபேசேகர, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா,பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.கிரிசாந்தன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சிரேஷ்ட மன்றாடியார் அதிபதி பிரியந்த நாவன்ன, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சட்டத்துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காணொளியாக பார்க்க…..https://fb.watch/mxHPfXrswE/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles