23.9 C
Colombo
Sunday, October 11, 2026

தமிழரின் தொன்மத்தைத் தேடிச் செல்லும் விண்வெளித் திரைக்காவியம் – “புஷ்பக 27” முன்னோட்டம் வெளியீடு

காரை சிவநேசனின் இயக்கத்தில் தயாராகியுள்ள “புஷ்பக 27” முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணம், கந்தா்மடத்தில் உள்ள நித்திலம் கலையகத்தில் நேற்று இரவு புஷ்பக 27 திரைப்படத்தின்  முன்னோட்டத்தினை பேராசிரியர் ரகுராம், வைத்திய கலாநிதி சிவன்சுதன், திரைப்பட நடிகர் இராஜமகேந்திரசிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

திரைப்படத்திற்கான திரைக்கதையை சத்தியா மென்டிஸ் எழுதியுள்ளாா்.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் சி.ரகுராம், வைத்தியர் சிவன்சுதன் ஆகியோரின் உரைகளுடன், இயக்குநா் காரை சிவநேசனின் பதிலுரையும் இடம்பெற்றது.

“தமிழரின் தொன்மத்தைத் தேடிச் செல்லும் விண்வெளித் திரைக்காவியம்” என்ற மகுடத்துடன் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு சிவநேசன் சுமாா் பத்து வருடங்கள் உழைத்திருக்கின்றாா். செப்டம்பா் முதல் வாரத்தில் இதனை வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக சிவநேசன் தெரிவித்தாா்.

காணொளியாக பார்க்க https://fb.watch/lC6V08HWTz/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles