32.2 C
Colombo
Friday, October 9, 2026

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளடக்கம் தொடர்பாக எமக்கு இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை – அங்கஜன் எம்.பி.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளடக்கம் தொடர்பாக எமக்கு இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மொஹிதீன் ஜூம்மா பெரிய பள்ளி வாசலுக்கு இன்றையதினம் (29) மைத்திரிபால சிறிசேன மற்றும் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அங்கஜன் இராமநாதன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளடக்கம் தொடர்பாக பாராளுமன்ற கூடி அறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்ற பின்னர் அதனை ஆராய்ந்து கட்சியில் தீர்மானம் எடுக்கப்படும். அதனடிப்படையில் எமது வாக்களிப்பு இருக்கும் – என்றார்.

காணொளியாக பார்க்க…https://fb.watch/ltoPAkYDQL/?mibextid=Nif5oz

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles