மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியபோது, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

