தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான பொருட்களையும் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒரு தொகுதி புத்தகப்பைகளையும் வழங்கி வைத்தது.
அமரர் மனோன்மணி நாகரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பம் மற்றும் பரிமளம் அறக்கட்டளையின் அறக்கட்டளையின் அனுசரனையுடன் குறித்த பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற இவ் கையளிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆரம்பக்கல்வித் பகுதித் தலைவர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்கேஸ்வரன், முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சமூக மேம்பாடு மற்றும் நலிவுற்றவர்களுக்கான வாழ்வாதார செயற்பாட்டுகளுக்கான இணைப்பாளர் வீரசிங்கம் , தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் வ.பார்த்திபன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


