28.9 C
Colombo
Friday, August 21, 2026

சரா.புவனேஸ்வரனுக்கு கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கௌரவிப்பு

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் விரிவுரையாளருமான சரா.புவனேஸ்வரன் ஆசிரியனாக, விரிவுரையாளராக, பொதுச் செயலாளராக, வளவாளராக முப்பத்தைந்து ஆண்டுகள் ஆற்றிய சேவையைப் பாராட்டி சேவையின் நிறைவு நாளான நேற்று கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்களின் தலைமையில் சிறப்பான கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  சி. கணேசலிங்கமும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாணம் கல்வி வலய செயலாளர் செ.சிவபாலசுந்தரும் கலந்து கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles