28.9 C
Colombo
Friday, August 21, 2026

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை ஐ.நா கண்டுபிடிக்க உதவ வேண்டும். நீண்ட காலமாக எமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை, வெயில்களிலும் போராடி வருகிறோம்.

எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக நாம் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது. எனினும் எமது பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles