வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்றுக்கு யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 17ம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.
குருதிக்கொடை வழங்கி உயிர் காக்கும் உன்னதப் பணியில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

