கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கு அமைவாக புதன்கிழமை(3) பிராந்திய வாய் சுகாதாரப்பிரிவினால் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கல்முனை மிஸ்பா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சர்வதேச வாய்ச்சுகாதர தினத்தையொட்டி பிராந்திய வாய் சுகாதார நிபுணர் வைத்தியர் எம். எச். கே. சரூக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகளில் ஒரு அங்கமாக இந் நிகழ்வு இடம்பெற்றதுடன் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஹம்மத் அஸ்மி உட்பட சுகாதார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இப்பாடசாலை மாணவர்களினால் வாய்ச் சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


