28.9 C
Colombo
Friday, August 21, 2026

தென்மராட்சி வலய துடுப்பாட்டமும், சதுரங்கமும் இறுதிப் போட்டிகள்

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படும் கடினப்பந்துத் துடுப்பாட்டம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1மணி முதல் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதயா மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வட மகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் பிரதம விருந்தினராகவும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் ந.சர்வேஸ்வரன், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி அதிபர் திருமதி லலிதாமலர் முகுந்தன் மற்றும் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், தென்மராட்சி அபிவிருத்திக் கழக ஐக்கிய இராச்சிய நிதியத்தின் உறுப்பினர் வெற்றிவேலு அசோகன், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் சர்வதேச விளையாட்டு இணைப்பாளர் ம.சிறீதாசன் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் வி.சுதர்சன் மற்றும் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றப் பொருளாளர் லயன். வ. ஶ்ரீபிரகாஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles