தீ விபத்தில் தீக்காயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பயனின்றி யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று (27) காலை மரணமடைந்துள்ளார்.
கடந்த 22ம் திகதி கணவன் அடுப்பு பகுதியில் பெற்றோல் போத்தலை வைத்ததை அறியாமல் தேநீர் வைக்கும் போது தீ மூட்டிய தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் பெற்றோல் போத்தல் தீப்பற்றி வெடித்து அவர் படுகாயமடைந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே மரணமடைந்தவராவார்.

