28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் 29 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் 29ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு மார்ச் மாதம் 29, 30,31 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இவ்வருட அமர்வு பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மாற்று தொடர்பாடலுக்கான தந்திரோபாயங்களை கண்டறிதல்” என்னும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்வில் பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் ‘யாழ்ப்பாணத்தில் வணிக நிறுவனங்களின் சவால்களைச் எதிர்கொள்ளல்’ எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

இவ் ஆராய்ச்சிற்காக பேராசிரியர் வேல்நம்பிக்கு பேராசிரியர் பாலசுப்ரமணியம் தங்கப்பதக்கம், வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில் சிறப்புப் பேருரைகள், கருப்பொருள் ஆய்வமர்வுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் அமர்வுகள் போன்றன எட்டு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன. பாடசாலை விஞ்ஞானப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வும் தலைவர் பேருரையும் இறுதிநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

31ஆம் திகதி மதியம் 11.30 மணிக்கு யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களை www.thejsa.org என்னும் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles