28.9 C
Colombo
Friday, August 21, 2026

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்றவர் கைது

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டள்ளது.

குறித்த சம்பவம் யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வியாழக்கிழமை(16) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கும் எந்தவொரு ஆவணங்களும் இல்லை எனவும்

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles