28.9 C
Colombo
Friday, August 21, 2026

நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் (வயது 63)என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து இருந்தபோது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி போலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles