28.9 C
Colombo
Friday, August 21, 2026

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (23) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி , வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் பேரணியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலிருந்து ஆரம்பமாகி சுற்றுவட்டத்தினூடாக ஏ9 வீதியிலுள்ள வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்து அதன் வாயிலில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles