யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த சில நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன்மணல் மயான பகுதியில் யாழ் மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்கு தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த விடயம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

