32.2 C
Colombo
Friday, October 9, 2026

றெமீடியஸின் மறைவுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி

யாழ் மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றையதினம் யாழ் மாநகர சபைக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ,மாநகர சபைக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றியதுடன் யாழ் மாநகர ஆணையாளர்,மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்றுகூடி இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தினர்.

இன்று செவ்வாய்க்கிழமை(14) யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கூட்டம் இரண்டாவது தடவையாக ஆரம்பிக்கவிருந்த நிலையில் அதற்கு முன்னதாக அஞ்சலி இடம்பெற்றது.

யாழ் மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles