யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் இந்தியன் கோர்னரில் உள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உருவச்சிலைக்கு இந்திய அமைச்சர் குழுவால் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் 250 நலிவுற்ற குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்குவதற்காக நேற்று மாலை
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகைதந்தபோதே மரியாதை செலுத்தப்பட்டது.
இதன்போது ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்
எல். முருகன்,யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.






