கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று(01) பகல் மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலளார் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் நிபோஜனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை மாத்தறையிலிருந்து கொழும்பு வந்த புகையிரதத்திலிருந்து தவறிவீழ்ந்து ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழந்தார்.
நிபோஜனின் இறுதிக்கிரியைகள் கிளிநொச்சியில் நடைபெற்ற நிலையில் மட்டு.ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் நிபோஜன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்தார்.


