25.6 C
Colombo
Wednesday, October 14, 2026

மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து ஒருவர் காணாமல்போன நிலையில் இருவர் உயிர்தப்பினர்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் இருவர் உயிர்தப்பியுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற நிலையிலும் குடும்ப நிலைமை காரணமாக நேற்று (30)இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச்சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

இந்த நிலையில் கடல் குழப்பம் காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போனவர் திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி(41வயது)என்பவரே காணாமல்போயுள்ளார்.

காணமல்போனவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் எனவும் காணமல்போனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கொக்குவில் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடல் சீரற்ற நிலையில் உள்ளதன் காரணமாக தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கமுடியாத நிலையுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் சீற்றமாகவுள்ளதனால் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவமான நிலையமும் மீன்பிடி திணைக்களமும் தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles