29.5 C
Colombo
Friday, August 21, 2026

பஷில் ராஜபக்ஷ நிதி அமைச்சர் மற்றும் எம்.பி.யாக பதவியேற்றார்.

பஷில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

பொருளாதார கொள்கை மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் என்ற பெயரிலான அமைச்சு ஒன்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் அமைச்சராக மஹிந்த ராஜபக்ஸ சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் இயங்கிய நிதி அமைச்சு, அவரின் கீழிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தண முன்னிலையில் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles