29.5 C
Colombo
Friday, August 21, 2026

கிராஞ்சியில்  வெளியாருக்கு அட்டை பண்ணை வழங்கப்படவில்லை – பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கம்!

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.

திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மேலதிக வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக கடலட்டைப் பண்ணைகளை கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 203 உறுப்பினர்களை விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காகவும் குறுகிய நலனுக்காகவும் கடலட்டைப் பண்ணைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

சுமார் 266 கடற்றொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினால், நெக்டா திணைக்களத்திற்கு 174 உறுப்பினர்களின் கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள்  கையளிக்கப்பட்டிருக்கின்றன. கிராஞ்சியில்  வெளியாருக்கு அட்டை பண்ணை வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டால் அதை நாம் எதிர்ப்போம்.

ஆனால் கிராஞ்சியில் போராட்டம் நடத்துபவர்கள் பிணாமிகளின் பெயரில் பண்ணைகளை அமைத்துவிட்டு பண்ணை வேண்டாம் எனப் போராடுகின்றனர்.

எமது பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக  வழங்கப்பட மற்றும் வழங்கப்படவுள்ள அட்டைப் பண்ணைகளை தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஆகவே ஊடகங்கள் கிராஞ்சியில் அட்டை பண்ணை யாருக்கு வழங்கப்படுகிறது. கடலுக்கு பாதிப்பாக அமையப்பெற்றதா என்ற  உண்மை  வெளிப்படுத்துவதோடு  நேரடியாக வருகை தந்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles