நாட்டு மக்களுக்கு இன்று, தற்கால நிலவர சிறப்பு விளக்கவுரை ஒன்றினை ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியின் உண்மை நிலை, மற்றும் அதிலிருந்து நாட்டினை மீட்டெடுக்க எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கவிருக்கும் செயற்திட்டங்கள்,
மற்றும் எமது பிராந்தியத்தில் நிலவும் பூகோள அரசியற் சிக்கல் நிலை மற்றும் உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவல் நிலை ஆகியவற்றுக்கு மத்தியிலும் –
நாட்டின் பொருளாதாரச் செழிப்பை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் என்பன தொடர்பான விளக்க உரையை இன்று 25ஆம் திகதி, இரவு 8.30 மணிக்கு, நாட்டின் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாகவும் ஒளிபரப்பாகவுள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

