27.8 C
Colombo
Friday, August 21, 2026

இன்று இரவு மீண்டும் பயணத்தடை அமுலாகும்.

நாடு முழுவதிலும் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது

அதற்கமைய இன்று புதன்கிழமை இரவு 11 மணி முதல் வருகின்ற 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரை இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்த தளர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டு, மீண்டும் இன்று இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற பொசன் விழாவின் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles