28.9 C
Colombo
Friday, August 21, 2026

பழைய பஸ்வண்டிகளை வடபகுதி கடலினுள் போடும் திட்டம் இன்று முன்னெடுப்பு -உயிர்ப் பல்வகைமையை பெருக்குமாம்.

வடக்கு கடலில் வாழும் உயிரினங்களின் பல்வகைமையை விருத்தி செய்வதற்கான செயற்றிட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வடக்குக் கடலில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட பஸ் வண்டிகளை கடலினுள் விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு தேவையான சூழலை உருவாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தில் சுமார் 40 கைவிடப்பட்ட பஸ் வண்டிகள் இவ்வாறு கடலினுள் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற கீழுள்ள இணைப்புவழியாக இணையுங்கள்.
https://chat.whatsapp.com/FZCdBol09JiE1knmBUviYj

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles