முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கட்சி காரியாலயத்திற்கு
இன்று (31) முற்பகல் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன்
நாமல் ராஜபக்ஷ உட்பட கட்சியின் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்தக் கலந்துரையாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

