29.5 C
Colombo
Friday, August 21, 2026

பலாலி அன்ரனிபுரம் பகுதியில் பெருந்தொகையான கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியில் இன்று அதிகாலை பெருந்தொகையான கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,  பலாலி அன்ரனிபுரம் பகுதியில் இன்று(29)அதிகாலை இரண்டு மணியளவில் பெருந்தொகையான கஞ்சாவுடன் ஹயஸ் வாகனமொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டு அச்சுவேலி பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஹயஸ் வாகனத்தில் இருந்த மானிப்பாய் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹயஸ் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் 100 கிலோ வரையான கஞ்சா மீட்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles