32.2 C
Colombo
Friday, October 9, 2026

அனுமதிப்பத்திரமின்றி பனைமரங்களை ஏற்றிவந்த ஆறு பேர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த ஆறு பேர் பொன்னாலை பகுதியில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்தநிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். எனவே வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மரங்களை கடத்திய குற்றச்சாட்டின் கீழும் ஏனைய ஐவர் சந்தேகத்தின்பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமரங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles