அஞ்சல் அலுவலகத்தின் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தபால் திணைக்களத்தினால் இரண்டு விசேட தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று மற்றும் நாளை தினங்ளில் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஓய்வூதிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் தலைமையகம் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மே மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்கள் இந்த விசேட தினங்களில் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என, தபால் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும், குறித்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய ஆவணங்களை எடுத்து வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்து சிரமங்கள் காரணமாக ஏதேனுமொரு தபால் அலுவலகம் திறந்திருக்காத பட்சத்தில், 1950 எனும் துரித அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு, மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

