27.8 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிஸார் அனுமதிமறுப்பு.

நாடுமுழுவதும் இன்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதும் வெளியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை யாழ்ப்பாண பொலிஸார் அனுமதி இல்லை என மறித்துள்ளனர்.

பயணத்தடை நடைமுறையில் உள்ள காலங்களில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை செய்ய முடியுமென அரசு அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் பயணத்தடை இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று மக்கள் சில நடைமுறைகளை பின்பற்றி வெளியில் செல்ல முடியும் என அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் தமது அலுவலகத்திற்கு சென்ற ஊடகவியலாளர் இடைமறிக்கப்பட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை என யாழ்ப்பாண பொலிஸார் கூறியுள்ளனர்.

அரசாங்கம் நாடு முழுவதும் ஒரு பொதுவான அறிவிப்புகளை விடுக்கும் போது யாழ்ப்பாண பொலிஸார் மாத்திரம் தனியான நடைமுறைகளை அமுல்படுத்துவது ஏன் ஏனும் கேள்வி எழுந்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles