25 C
Colombo
Thursday, October 8, 2026

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்!

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8ஆம்) திகதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர்.

ஏதோ ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்ததால் மகளிர் தினம் அவசியமாக இருந்தது. இன்றுதான் அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் வைத்து விட்டனரே பிறகு என்ன என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. இன்றும் வீடு, முதல் நாடு வரை பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

தாய் வழி சமூகம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்த  காலம் தொட்டு பெண் என்பவள் இன்றும் இங்கு ஆண்களுக்கு ஒரு படி கீழ் என்பதையே இந்த சமூகம் கற்றுக் கொடுத்துள்ளது.

வீடுகளை பொறுத்தமட்டில் இன்றளவும் ஆண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பெண் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தொடங்கி அனைத்து வயதிலும் ஏதோ ஒரு வகையில் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.

மகளிர் தினம் என்பது பொதுவான கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது உழைக்கும் பெண்களுக்கான தினம், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களும் தங்களுடைய உரிமைகளுக்காக ஒன்று திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தினம். 1850-களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கால்பாதிக்க தொடங்கினர்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் சம்பளத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. அது வேலை செய்யும் பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் மாநாட்டை நடத்தினர். அதில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். அந்த மாநாடு பெண்களுக்கு சம உரிமை, ஊதிய உயர்வு, நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது. இதன் காரணமாக கிளாரா ஜெட்கின் புகழானது உலகெங்கிலும் பரவ தொடங்கியது.

பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை உலகம் முழுவதும் நிலைநாட்டும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கருதினார். இதனை தொடர்ந்து மகளிர் தினம் முதன்முறையாக 1911, மார்ச் 19-ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஆனால் 1913-ம் வருடம் மார்ச் 8ம் தேதி பெண்களுக்கான வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தினத்தை நினைவுபடுத்தும் வகையில் மார்ச் 8-ம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles