28.9 C
Colombo
Friday, August 21, 2026

நாளை முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வைத்து வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற அனுமதி.

நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களை இன்று முதல் மே 31 வரை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவர் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாளை முதல் ஒரு நாளில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இது நபரின் தேசிய அடையாள அட்டை எண்ணின் கடைசி இலக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 2,4,6,8 மற்றும் 0 உடையவர்கள் ஒரு நாளிலும் தேசிய அடையாள அட்டை இலக்கம் 1, 3,5,7 மற்றும் 9 உடையவர்கள் அடுத்த நாளிலும் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 15 நெருங்கிய உறவினர்களின் பங்களிப்புடன் திருமண பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles